இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சோயிப் பஷிர் என்ற 20 வயது சுழல்பந்து வீச்சாளர் விசா பிரச்சனைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “தனது அறிமுகப் போட்டிக்கு முன்பாக ஒரு இளம் வீரர் இத்தகையை சூழலை எதிர்கொள்வது எனக்கு வருத்தமாக உள்ளது. அவருக்காக நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். நாங்கள் எங்கள் அணியை டிசம்பர் மத்தியிலேயே அறிவித்தோம். ஆனால் விசா இல்லாமல் அவர் நாடு திரும்பியுள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது. அவர் இங்கு வரமுடியாததால் அவரால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.