எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

vinoth

திங்கள், 17 ஜூன் 2024 (18:13 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. அணிக்குள் வீரர்கள் பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரின் தலைமையில் குழுவாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், “எங்கள் தோல்விக்கு என்னால் எந்தவொரு வீரரையும் காரணம் சொல்ல முடியாது. நாங்கள் ஒரு அணியாக சரியாக விளையாடாததுதான் காரணம். அதனால்தான் வெளியேறினோம் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். தோல்விக்கு 15 பேரும்தான் பொறுப்பேற்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்