ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

vinoth

ஞாயிறு, 16 ஜூன் 2024 (18:28 IST)
நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தவர்களில் ஷுப்மன் கில்லும் ஒருவர். அவர் இந்திய அணியோடு அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். ஆனால் திடீரென்று ஷுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து விரைவில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷுப்மன் கில் அமெரிக்காவில் அணியோடு இல்லாமல் வெளியில் ஊர்சுற்றி வந்ததால் அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கரை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. உலகக் கோப்பை தொடரைக் காணவந்த அவரோடு கில் அங்கு ஊர் சுற்றிப் பார்த்ததாகவும் அதனால் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷுப்மன் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் ஷர்மாவை பின்தொடர்வதை நிறுத்தினார். இதையடுத்து தான் ரோஹித் ஷர்மாவோடும், அவரின் மகளோடும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “நாங்கள் இருவரும் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்கிறோம்” என நக்கல் செய்யும் விதமாக பதிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்