ஈ சாலா கப் நம்தே… ஆரஞ்ச் கேப் & பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றிய RCB

வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (09:15 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி விராத் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ் அபாரமான தொடக்கம் காரணமாக நான்கு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.  இதனை அடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் ஆர் சி பி அணியில் டு பிளஸி சிறப்பாக விளையாடி சிறப்பாக விளையாடி 82 ரன்கள் சேர்த்தார். இந்த ஐபிஎல் தொடரில் 300 ரன்களைக் கடந்து ஆரஞ்ச் தொப்பியைக் கைவசம் வைத்துள்ளார் பாஃப். அதே போல ஆர் சி பி அணியின் சிராஜ் 12 விக்கெட்கள் கைப்பற்றி பர்ப்பிள் தொப்பியை வைத்துள்ளார். 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்