நானாவது புடிச்சு தொலையிறேன்.. தள்ளி நில்லுங்க!? – க்ரவுண்டில் தல தோனி ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:05 IST)
ஐபிஎல் சீசன் தொடக்கம் முதலே சிஎஸ்கேவின் ஃபீல்டிங் மோசமாக இருந்து வருகிறது. அது இந்த போட்டியிலும் நன்றாக தெரிந்தது.

நேற்று நடந்த பரபரப்பான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்ந்தெடுத்தாலும் சிஎஸ்கேவின் கான்வே, துபேவின் அபாரமான ஆடி 227 ரன்களை இலக்காக வைத்தனர்.

அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் டூ ப்ளெசிஸ், மேக்ஸ்வெல்லின் பார்ட்னர்ஷிப், ‘இதெல்லாம் ஒரு இமாலய இலக்கா? எப்படி அடிக்கிறோம் பாருங்க” என்பது போல அமைந்தது. டூ ப்ளெசிஸ் சிக்ஸாக அடித்து விளாசிக் கொண்டிருந்தார். இடையே சில பந்துகள் மைதானத்திற்குள்ளேயே அழகாக கேட்ச் கிடைத்தன. ஆனால் சிஎஸ்கே வீரர்களின் மோசமான ஃபீல்டிங்கால் கேட்ச் மிஸ் ஆனது.

மிஸ் ஆன அந்த கேட்ச்சுகளை சரியாக பிடித்திருந்தால் ஆரம்பத்திலேயே ஆர்சிபியை மடக்கி இருக்கலாம். சிஎஸ்கே வீரர்களின் இந்த மோசமான ஃபீல்டிங்கால் தோனி கொஞ்சம் கோவமாகதான் இருந்தார். அதனால்தான் டூ ப்ளெசிஸ்க்கு மொயின் அலி வீசிய பந்து மூக்கு மேல ராஜாவாக கீழே வந்தபோது “யாரும் பந்தை பிடிக்க வராதீங்க?” என்பதுபோல் கையை அசைத்து நகர சொல்லிவிட்டு தோனியே அந்த பந்தை பிடித்து அவுட் செய்தார்.



அதேபோல மேக்ஸ்வெல்லுக்கு தீக்‌ஷனா வீசிய பந்து கேட்ச் கிடைத்தபோதும் தோனியே அதை கேட்ச் பிடித்து அவுட் செய்தார். இந்த இரண்டு கேட்ச்களை தோனி பிடிக்காமல் விட்டிருந்தால் வெற்றி வாய்ப்பு கேள்வி குறியாகி இருக்கும்.

கடைசி ஓவரில் பதிரானா வீசிய பந்தில் ஆர்சிபியின் இம்பேக்ட் ப்ளேயரான பிரபு தேசாய் அடித்த சிங்கிளை கூட மொயின் அலி தடுத்தார். ஆனால் பந்தை எடுத்து வீசாமல் தாமதித்து கொண்டிருந்தார். அதற்குள் பிரபுதேசாய் திரும்ப ஓடி வர பதிரானாவும், தோனியும் பந்தை வீசுமாறு கத்தினர். பின்னர் மொயின் அலி சூதானமாகி பந்தை வீசி அதை தோனி ஸ்டம்பில் அடிப்பதற்கு பிரபுதேசாய் ரீச்சுக்குள் வந்து விட்டார்.

இதனால் தோனி செம கடுப்பாகி போனார். அது அவரது முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது. என்னதான் பெரிய இலக்குகளை சிஎஸ்கே சேஸ் செய்தாலும் கூட இப்படி முக்கியமான கேட்ச்சுகளை விடுவது, அலட்சியமாக ஃபீல்டிங் செய்வது போன்ற வீரர்களின் செயல்கள் தோனியை டென்சனாக்கி வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களிலேயே ஸ்லோ பவுலிங் போட்டதற்காக வீரர்களை கண்டித்தார் தோனி.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்