உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த சிராஜுக்கு அரசு வேலை அறிவித்த தெலங்கானா அரசு!

vinoth

புதன், 10 ஜூலை 2024 (07:52 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த இறுதிப் போட்டியில் முக்கியமானக் கட்டத்தில் கோலி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த வெற்றியை அடுத்து வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ. அதுமட்டுமில்லாமல் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள் தங்கள் வீரர்களுக்கு தனியாகப் பரிசுத்தொகையை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சிராஜுக்கு மிகப்பெரிய வீடு ஒன்றும், அரசு வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்