உலகக் கோப்பைக்குப் பின் கோலி ஓய்வு பெறவேண்டும்… அக்தரின் கருத்தால் அதிருப்தியான ரசிகர்கள்!

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (07:39 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு, இந்தியாவில் எப்படி ரசிகர்கள் அதிகமோ, அதுபோலவே பாகிஸ்தானிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட கோலியின் ரசிகர்களாக உள்ளன.

அதில் மிக முக்கியமானவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். அவர் இப்போது கோலி பற்றி பேசும்போது “உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கோலி, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இன்று கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் மிக அதிக உடல்தகுதி பேணும் கிரிக்கெட்டர்களில் விராட் கோலியும் ஒருவர். அவரால் இன்னும் 5 முதல் 6 ஆண்டுகளுக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடலாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்