ஓய்வுக்குப் பிறகு தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். ஸ்ரீகாந்த், தன்னுடையக் கருத்துகளை வெளிப்படையாக முன்வைப்பவர். அது சில நேரங்களில் சர்ச்சைகளை உருவாக்கவும் செய்யும்.
இந்நிலையில் இப்போது வீரர்கள் ஓய்வு முடிவு குறித்துப் பேசியுள்ளார். அதில் “ கிரிக்கெட் வீரர்கள் 36-37 வயதில் ஓய்வை அறிவிக்கக் காரணமே அவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு பிரச்சனை. பார்வையில் சிறிய அளவு குறைபாடு இருந்தாலும் பேட்டிங் செய்வது கடினம். பல வீரர்களின் ஓய்வுக்குக் காரணம் பார்வை குறைபாடுதான்” எனக் கூறியுள்ளார்.