இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 45 ரன்களும், சிம்மன்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வினய் குமார் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து, 149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய மாஸ்டர் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 25 ரன்கள் எடுத்தார்.