இந்நிலையில் கோலியின் ஆர் சி பி மற்றும் கம்பீர் அங்கம் வகிக்கும் கொல்க்த்தா அணி போட்டியின் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி கட்டித் தழுவி கொண்டனர். இந்த நிகழ்வின் போது தொலைக்காட்சியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ரவி சாஸ்திரி “கம்பீரின் இந்த செயலுக்காக அந்த அணிக்கு பேர்ப்ளே விருது கொடுக்கப்படலாம்” எனக் கூறினார். அதற்கு சுனில் கவாஸ்கர் “பேர்ப்ளே விருது மட்டும் இல்லை ஆஸ்கர் விருதே கொடுக்கப்படலாம்” எனக் கலாய்க்கும் விதமாக பேசியிருந்தார்.