ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் ஒரு மைல்கல்… இன்றைய போட்டியில் கோலி படைக்கவுள்ள சாதனை!

vinoth

ஞாயிறு, 2 மார்ச் 2025 (09:49 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக இருந்தது.

ஆனால் கடந்த ஞாயிறன்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ‘ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்துள்ளார். இதனால் மீண்டும் அவர் மேல் நம்பிக்கைத் துளிர்க்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் இன்று நியுசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் போட்டி அவரின் 300 ஆவது ஒருநாள் போட்டியாகும். இந்த மைல்கல் சாதனையை எட்டும் 7 ஆவது இந்திய வீரர் கோலி ஆவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்