இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள்… மூன்றாவது இடத்தில் கோலி!

திங்கள், 17 அக்டோபர் 2022 (09:43 IST)
விளையாட்டு வீரர்கள் இப்போது சமூகவலைதளங்களை ரசிகர்களுடன் தொடர்பாடல் தளமாக கருதாமல் விளம்பர தளங்களாகவே கருதி வருகின்றனர். இதன் மூலம் தங்கள் பயன்படுத்துவதாக சில பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் பல கோடிகளை வருவாயாக ஈட்டி வருகின்றனர்.

அதில் பிரபலங்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஸ்பான்ஸர்களிடம் பணம் பெற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலில் கோலியும் இணைந்துள்ளார்.

இந்த பட்டியலில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ முதல் இடட்தில் 85.2 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளார். அதுபோல மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் 71.9 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கும் கோலி 36.6 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்