அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜெய்ஸ்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் பெரிய இன்னிங்ஸ்களை கட்டமைக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்
.
கருண் நாயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 204 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்ஸன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் இடையே மழைக் குறுக்கிட்டதால் கிட்டத்தட்ட 25 ஓவர்கள் நேற்று குறைவாக வீசப்பட்டது.