கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார் அஸ்வின். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் அவருக்கு இடம் இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டு விளையாட அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்நிலையில் இப்போது ஆசியகோப்பை தொடரில் அவர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இது சம்மந்தமாக பேசியுள்ள முன்னாள் வீரர் கிரண் மோரே “அஸ்வினை அணியில் எடுத்தது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. அவரை அணியில் எடுக்கிறார்கள். பின்னர் அவர் ஆடும் லெவனில் விளையாடுவது இல்லை. இப்போது மீண்டும் எடுத்துள்ளார்கள். அவருக்குப் பதிலாக அக்ஸர் படேலையோ அல்லது முகமது ஷமியையோ எடுத்திருக்கலாம். அவர்கள் இருவரும் விக்கெட் வீழ்த்தும் திறமை பெற்றவர்கள்.” எனக் கூறியுள்ளார்.