கோலியை ஓவர்டேக் செய்வாரா ஷுப்மன் கில்? பீட்டர்சனின் கணிப்பு!

vinoth

புதன், 31 ஜனவரி 2024 (13:52 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.

ஆனால் அவர் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கான இடம் கேள்விக்குறியாகி வருகிறது. அதுபோல டி 20 போட்டிகளில் ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஆகியோர் இருப்பதால் அவரின் இடம் இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் முக்கிய ஆட்டக்காரராக கோலி இருக்கமாட்டார் என்றும் அவருக்கு பதில் இளம் வீரரான ஷுப்மன் கில்தான் இருப்பார் என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்