இதனால் ஏற்கனவே மேற்கு வங்கம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி உடைந்து விட்ட நிலையில் தற்போது உத்தர பிரதேசத்திலும் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள பெரிய கட்சி காங்கிரஸ் என்றாலும் அந்த கட்சிக்கு மதிப்பு கொடுத்து போதுமான தொகுதிகள் தர மறுத்து வருகின்றன. இந்த நிலையில் 80 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் வெறும் 11 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளதை அடுத்து மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.