வரட்டாங்ங்.. இங்கிலாந்துக்கு கிளம்பிய ஆர்ச்சர்! மாற்று வீரர் யார்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (15:43 IST)
ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட நிறைவை எட்டி வருகின்றன. இந்நிலையில் ப்ளேஆஃப் தரவரிசையில் முதல் நான்கு இடங்களை எட்டிப்பிடிக்க 10 அணிகளுக்கிடையே பெரும் மோதல் நடந்து வருகிறது.

5 முறை சாம்பியன் பட்ட வென்ற மும்பை அணி இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. 10 போட்டிகளில் 5 போட்டிகள் மட்டுமே வென்ற மும்பை அணி மீதமுள்ள 4 போட்டிகளில் 3வது வென்றால்தான் ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாத ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த இயலவில்லை.

கொஞ்சம் அவர் ஃபார்முக்கு வர முயன்ற நிலையில் தற்போது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு உடல் தகுதியை மீண்டும் பெறுவதற்காக அவர் லண்டனுக்கே புறப்படுகிறார். அவருக்கு பதிலாக இன்று முதல் க்ரிஸ் ஜோர்டன் மாற்று வீரராக களம் இறங்குகிறார். இந்த மாற்றம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கைக்கொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்