இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் டிராவிட்டுக்குப் பிறகு அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்ட்டி ரோட்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாண்ட்டி ரோட்ஸ் ஃபீல்டிங் செய்வதில் ஜாம்பவான் என்று பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகை இந்திய அணிக்கு மேலும் வலுகூட்டும் என்பது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.