இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தோடு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் பிரபல வீரர்!

வெள்ளி, 26 மே 2023 (08:46 IST)
இங்கிலாந்து அணிக்காக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய். அதுதவிர, 20 ஓவர் லீக் போட்டிகள மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலும் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குக் காரணம் அவர் அமெரிக்காவில் நடக்கும் போட்டிகளில் அந்த நாட்டு அணியோடு விளையாட உள்ளதுதான் என்று சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய மதிப்பில் 36 கோடி ரூபாய் தர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்