துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.
இந்நிலையில் இப்போது மிஷ்கின் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஏன் தொப்பி வைத்தேன் என்பது பற்றி பேசியுள்ளார். பழம்பெரும் இயக்குனர் TN பாலு இயக்கத்தில் உருவான சங்கர்லால் வகை படங்கள் தனக்கு பிடிக்கும் என்பதால் அதன் நினைவாகதான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்து எடுத்தேன் எனக் கூறியுள்ளார்.