பிரபல வீரரின் பெயர் அறிவிக்கப்பட்டதும் கையெடுத்து கும்பிடு போட்ட ஆர் சி பி நிர்வாகிகள்!

புதன், 20 டிசம்பர் 2023 (09:02 IST)
ஐபிஎல் மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவருக்கு அடுத்த படியாக பேட் கம்மின்ஸ் 20.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஆனால் இவர்களோடு இணைந்து சிறப்பாக பந்துவீசும் ஜோஷ் ஹேசில்வுட்டை எந்தவொரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்தமுறை இவரை ஆர் சி பி அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் இந்த முறை அந்த அணியும் அவரை எடுக்கவில்லை. ஏனென்றால் கடந்த சீசனில் காயம் காரணமாக அவர் பாதி போட்டிகளில் விளையாடவில்லை.

அதனால் ஏலத்தில் அவர் பெயர் அறிவிக்கப்பட்ட போது ஆர் சி பி நிர்வாகி ஒருவர் கையெடுத்து கும்பிடு போட்டு “அவர் வேண்டவே வேண்டாம்” என்பது போல ரியாக்‌ஷன் கொடுத்தார். இந்த ஆண்டு ஹேசில்வுட் ஐபிஎல் போட்டித் தொடரின் போது அவர் மனைவியின் பிரசவத்துக்காக முதல் 5 வாரங்கள் விளையாட மாட்டார் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்க எந்த அணிகளும் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்