இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.
அதையடுத்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “தேவையில்லாத வதந்திகள் வேண்டாம்” என ஸ்டேட்டஸ் வைத்து பதிலளித்துள்ளார். ஆனாலும் ரோஹித்தும், ஜடேஜாவும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.