தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

vinoth

வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (08:23 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டர்சன் –டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்புடன் ஒரு டி20 தொடர் போல விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இரு அணிகளும் தலா 2 போட்டிகளை வென்று தொடர் சமனில் முடிந்துள்ளது. மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணி இந்த தொடரை சமனில் முடித்ததே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஜெய்ஸ்வால், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்றவர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியின் பலத்தை நிரூபித்துள்ளனர்.

இந்த தொடரில் இரண்டு தொடர்நாயகன் விருதுகள் அளிக்கப்பட்டன. இந்திய அணி சார்பாக ஷுப்மன் கில் இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்ட்டன் மெக்கல்லத்தால் தேர்வு செய்யப்பட்டார். அதே போல இந்திய அணி பயிற்சியாளரால் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த தேர்வு சர்ச்சைகளைக் கிளப்பியது. ப்ரூக்கை விட ரூட் எல்லாவிதத்திலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

இந்நிலையில் தொடர் நாயகன் விருது குறித்துப் பேசியுள்ள ப்ரூக் “தொடர் நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர். கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. ரூட்டின் அனுபவம் பாராட்டப்பட்டிருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்