சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியை கருத்தில் கொண்டு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஏற்கனவே தினமும் 8 விமான சேவைகள் உள்ளன. அதேபோல் சென்னையில் இருந்து திருச்சிக்கு 14 விமான சேவைகள் உள்ளன. இந்த நிலையில், சென்னை – தூத்துக்குடி இடையே இனி 12 விமான சேவையாகவும்
சென்னை – திருச்சி இடையே 22 விமான சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.