ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா புரிந்த வரலாற்று சாதனை குறித்த செய்தி தொகுப்பு படங்களை பகிர்ந்துள்ளது ஐசிசி.
ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த சுற்று பயண ஆட்டத்தில் 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த வரலாற்று சாதனை அணியின் முன்னணி வீரர்கள் இல்லாமலே நிகழ்த்தப்பட்டது மற்றொரு ஆச்சர்யம்.
இந்நிலையில் இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியை உலகம் முழுவதும் உள்ள பிரபல செய்திதாள்கள் புகழ்ந்து எழுதியுள்ளன. அந்த உலக செய்தித்தாள்களின் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஐசிசி கப்பா சாதனைக்கு பிறகான தலைப்பு செய்திகள் என பதிவிட்டுள்ளது.