இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று மூலம் தேர்வாகும் அணி என 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில், நடுவரிசையில் இடம் பிடிப்பதற்காக 5 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, ஜாதவ், குர்னல் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தீவிரமாக பரிசீலிக்கப்படுவார்கள்.
புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து ஷர்துல் தாக்கூர், சித்தார்த் கவுல் பெயர் ஆலோசிக்கப்படலாம். தீபக் சாஹருக்கு வாய்ப்பிருக்கும் என தெரிகிறது.