பின்னர் பிரதமர் மோடியை, இந்திய வீரர்கள் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி திறந்தவெளி வாகனத்தில் இந்திய வீரர்கள் கோப்பையுடன் வான்கடே மைதானத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது மும்பை மரைன் டிரைவ் சாலையில் அலைகடலென திரண்ட ரசிகர்கள், இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. கையில் பதாகைகள் ஏந்தி, கிரிக்கெட் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரஹ்மானின் தேசபக்திப் பாடலான 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டது. இந்த பாடலை இந்திய வீரர்களும், ரசிகர்களும் இணைந்து பாடியது மைதானத்தில் உணர்ச்சி பொங்கியது. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.