கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

vinoth

திங்கள், 1 ஜூலை 2024 (08:32 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கோப்பை வென்ற பிறகு இந்திய வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட பலரும் மிகவும் எமோஷனலாக காணப்பட்டனர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி  எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் வெற்றிக் கோப்பையோடு செல்வது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கரிபீயன் தீவுகளில் இருந்து நேற்று இந்திய வீரர்கள் தாயகம் கிளம்ப இருந்தனர். ஆனால் அங்கு பெரில் எனும் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பார்படாஸில் உள்ள விமான நிலையமே மூடப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்களின் பயணம் தாமதமாகியுள்ளது. தற்போதைக்கு வீர்ரகள் ஹோட்டலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்