தினேஷ் கார்த்திக்கை புறக்கணிக்கும் இந்திய அணி: எதனால்?

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (21:25 IST)
தினேஷ் கார்த்திக் ஒரு சில ஆட்டங்களிலேயே ஆடியிருந்தாலும் அதில் தனது திறமையை நிரூபித்தவர். உலக கோப்பை ஆரம்பித்தது முதலே அணியில் ஆள் மாற்றப்படும்போதெல்லாம் தினேஷ் கார்த்திக் வரவேண்டும் என பல ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் இந்திய அணி தினேஷ் கார்த்திக்கு சரியான வாய்ப்பு வழங்கவில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2004 உலக கோப்பையிலிருந்தே இந்திய அணியில் இருந்து வருகிறார். டி20 போட்டிகளில் மட்டும் 27 அரை சதங்கள் வீழ்த்தியுள்ளார். டி20 உலக கோப்பையில் இறுதி ஆட்டத்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிபெற செய்தவர் தினேஷ் கார்த்திக்.

தற்போதைய உலக கோப்பை போட்டியில் அவர் களமிறங்க நிறைய வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்துவிட்டு வேறு ஆட்களுக்கு வாய்ப்பை வழங்கியது இந்திய அணி. கடைசியாக ஆள் பற்றாக்குறையால் கேதர் ஜாதவ்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். இதை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர். வழக்கமாக கேதர் ஜாதவ் கோஹ்லிக்கு பிறகு 4வது பேட்ஸ்மேனாக களம் இறங்குவார். அந்த 4வது இடத்தையே தினேஷுக்கு கொடுக்காமல் 6 வது இடத்தில் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தனர். இது இயல்பான ஒன்றுதான் என்றுகூட விட்டுவிடலாம். 6வது பேட்ஸ்மேனாக அதிகம் ஓவர் இல்லாத இடத்தில் தனது திறமையை நிரூபிப்பது கடினமான காரியம். இன்று தினேஷ் அதை தவறவிட்டுவிட்டார்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டவர் தினேஷ் கார்த்திக். இன்று அவருக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் ரிஷப் பந்த்-க்கு வாய்ப்பளித்தது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்படி பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே அவருக்கு சரியான வாய்ப்பை வழங்காமல் வேண்டுமென்றே அவரை புறக்கணிக்கிறதா இந்திய கிரிக்கெட் கவுன்சில்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேட்டிங் ஆர்டரை மாற்ற கேப்டனுக்குதான் உரிமை உண்டு என்ற வகையில் பார்த்தால் முன்னாள் கேப்டன் தோனியும், இப்போதைய கேப்டன் விராட் கோஹ்லியுமே கேள்விக்குள்ளாவர்கள். இதுகுறித்து ரசிகர்கள் பலர் தங்களது ஆதங்கங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்