இரண்டாவது டெஸ்டில் அசத்தும் இந்தியா! – ரஹானே சதம் விளாசி அட்டகாசம்!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (12:48 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 72 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் பெற்றிருந்தது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இரண்டாவதாக களம் இறங்கியுள்ள இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தொடக்கநிலை பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால் ரன்களே எடுக்காமல் வெளியேறினாலும், சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்கள் வரை ஸ்கோர் செய்தார். தொடர்ந்து விளையாடி வரும் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானே 200 பந்துகளுக்கு 104 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளார். 91 ஓவர்கள் முடிவில் 277 என்ற ரன் கணக்கில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்