3-வது ஒருநாள் போட்டி; இந்திய அணி அபார வெற்றி

வியாழன், 8 பிப்ரவரி 2018 (11:39 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.
 
இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 160 ரன்களும், ஷிகர் தவான் 76 ரன்களும் குவித்தனர்.
 
304 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்திலேயே சொதப்பியது. டுமினி 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொர்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இதன்முலம் இந்திய அணி 6 ஒருநாள் கொண்ட போட்டி தொடரில், 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்