இந்தியா பாகிஸ்ஹான் போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 11 ஆயிரம் பேர் !

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:45 IST)
இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

அடுத்து டெல்லியில் நாளை ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதையடுத்து அக்டோபர் 15 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து அகமதாபாத்தில் விளையாடுகிறது.

இந்த போட்டிதான் இந்த உலகக் கோப்பை தொடரின் ஹை வோல்டேஜ் போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியைக் காண உலகின் பல இடங்களில் இருந்தும் ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியால் அகமதாபாத் நகரில் போட்டி நடக்கும் நாளன்று ஹோட்டல்களில் அறை வாடகை உச்சத்தைத் தொட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக்காக சுமார் 11 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 7,000 காவல் துறையினர், 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்