அடிலெய்ட் டெஸ்ட் ஆக்ரோஷ உரையாடல்.. சிராஜ் & ஹெட்டுக்கு அபராதம்?

vinoth

செவ்வாய், 10 டிசம்பர் 2024 (09:27 IST)
அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை அடித்து குவித்தது. அந்த அண்யின் டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதமடித்தார்.

முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள்தான் என்று ஆனது. அதை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சிராஜ்.

அப்போது இருவரும் மாறி மாறி ஆக்ரோஷமாக பேசி வாக்குவாதம் செய்தனர். இது மைதானத்தில் ஒரு சூடான சூழலை உருவாக்கியது. இது சம்மந்தமாக இருதரப்பும் தங்கள் தரப்பு நியாத்தை வெளியிட்டனர். இந்நிலையில் இப்போது ஐசிசி இருவருக்கும் ஒழுங்கு நடவடிக்கையாக அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்