ஸ்டாப் கிளாக் விதியைக் கட்டாயமாக்கியது ஐசி்சி… பவுலர்களுக்கு கூடுதல் அழுத்தம்!

vinoth

சனி, 16 மார்ச் 2024 (09:07 IST)
டி20, ஒருநாள் கிரிக்கெட் போன்ற லிமிடெட் ஓவர் போட்டிகளில் அணிகள் தங்கள் ஓவர்களை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் போட்டியை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதுபோன்ற சமயங்களில் அணித் தலைவர் அல்லது மொத்த அணிக்கே அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை ஐசிசி எடுத்து வந்தது.

இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக ஸ்டாப் கிளாக் முறையை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. இதன் படி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் பவுலிங் அணி தொடங்க வேண்டும். அப்படி 2 முறைக்கு மேல் தொடங்காவிட்டால் நடுவரால் எச்சரிக்கைக் கொடுக்கப்படும். எச்சரிக்கைக்குப் பிறகும் மீண்டும் இந்த தவறை செய்தால் பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும்.

இந்த விதியை இப்போது கட்டாயமாக்கியுள்ளது ஐசிசி. இந்த விதியின் அறிமுகத்தால் பவுலர்கள் கூடுதலான அழுத்தததை உணர வாய்ப்புள்ளது. முக்கியமான நேரங்களில் பீல்ட் செட் செய்வது, கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகியோரோடு ஆலோசிப்பது என நேரம் எடுத்துக் கொள்வதை இனிமேல் தவிர்க்க வேண்டிய சூழல் வரலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்