மக்கள் நீதி மய்யத்தை யாராலும் வீழ்த்த முடியாது- கமல்

செவ்வாய், 11 மே 2021 (22:31 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக மற்றும் ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இதில், ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. எனவே ம.நீ.,ம துணைத்தலைவர் மகேந்திரன் பொன்ராஜ் உள்ளீட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை யாராலும் வீழ்த்த முடியாது என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோவைத் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு 335 வாக்குகள் பணம் கொடுக்காமல் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். அரசியலை வியாபாரமாகப் பார்க்காமல் கடமையாகப் பார்ப்பவர்கள் மட்டுமே இதில் செழிக்க முடியும் எனவும், தவறிழைத்தவர்களைத் திருத்தும் கடமையும், உரிமையும் தனக்குண்டு எனத்தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவரது கட்சியிலிருந்து விலகிய மகேந்திரனை துரோகி, கோழை என கமல்ஹாசன் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்