ஐபிஎல்2017 - சிக்ஸ் அடிப்பது எனக்கு சாக்லெட் சாப்பிடுவது மாதிரி; கிறிஸ் கெய்ல்

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (21:22 IST)
சிக்ஸ் அடிப்பது தனக்கு சாக்லெட் சாப்பிடுவது போன்றது என வெஸ்ட் இண்டீஸ் வீரர் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.


 

 
ஐபிஎல் சீசன் 10 தொடரில் பெங்களூரு அணியில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்கள் கடந்து சாதனை படைத்தார். மேலும் நேற்றைய போட்டியில் 38 பந்துகளுக்கு 7 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவித்தார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. சிக்ஸர் அடிப்பது எனக்கு சாக்லெட் சாப்பிடுவது போல் ரொம்ப பிடிக்கும், என்றார்.
 
மேலும் நேற்று நடந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் மற்றும் கோலியின் அதிரடியால் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிப்பெற்றது.
அடுத்த கட்டுரையில்