மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டன் ஆக ஆசைப்பட்டு இந்திய அணி இடமே காலியாகிடும் போலயே- பாண்ட்யாவின் பரிதாப நிலை!

vinoth

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (07:12 IST)
இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பினாலும் அனைவராலும் பேசப்படும் ஒரு பெயராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அதனால் அவர் டாஸ் போட செல்லும்போதும், களமிறங்கும் போது அவரை தாக்கி கடுமையாக ஏளனம் செய்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நேற்றைய சி எஸ் கே அணிக்கு எதிரான போட்டியிலும் இது தொடர்ந்தது. அதற்கேற்றார் போல ஹர்திக் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார்.

அவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 தோல்விகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் மோசமான நிலையில் உள்ளது. நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு ஓவருக்கு 20 ரன்கள் வீதம் கொடுத்து சொதப்பினார். இந்த சீசனில் அவர் பெரிதாக விக்கெட்டும் எடுக்கவில்லை. அதனால் அவரை டி 20 உலகக் கோப்பை தொடரில் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்