என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை… மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் பற்றி கங்குலி மழுப்பல் பதில்!

சனி, 6 மே 2023 (08:40 IST)
முன்னதாக, பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தற்போது மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்துக்கு மற்ற துறை விளையாட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்தாலும் கிரிக்கெட் வீரர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. இதுபற்றி பேசியுள்ள வினேஷ் போகத் “ஒட்டு மொத்த தேசமும் இன்று கிரிக்கெட்டை வழிபடுகிறது. ஆனால் எங்கள் விவகாரம் குறித்து எந்த கிரிக்கெட் வீரரும் இதுவரை வாய் திறக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என்றால் பரவாயில்லை குறைந்தபட்சம் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ நடுநிலையாவது ஏதாவது பேசலாம், இது எனக்கு வலியை தருகிறது” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி “உண்மையில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.  அவர்களுக்கான யுத்தத்தில் அவர்களே சண்டையிடட்டும். விளையாட்டு உலகத்தில் நமக்கு முழுவதுமாக தெரியாத விஷயத்தில் கருத்து சொல்லக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார். 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்