ரோகித்துக்கு எதுக்கு ஓப்பனிங்? கங்குலி கேள்வி

வியாழன், 15 நவம்பர் 2018 (19:38 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடர் 21 ஆம் தேதி துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி துவங்குகிறது. 
 
இந்நிலையில், போட்டியின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பேசியுள்ளார். அதில், நமது பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தால் வேகப்பந்து வீரர்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த இயலும். 
 
வேகப்பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லும். 11 பேர் கொண்ட அணியில் 3 வேகப்பந்து வீரர்கள் இடம் பெறுவார்கள். 
 
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். வார்னர், சுமித் இல்லாதது இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாகும். என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவை 11 பேர் கொண்ட அணியில் சேர்க்க வேண்டும். 
 
தற்போது பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கும் அவர் 6 வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர். மற்றொரு வாய்ப்புக்கு அவர் தகுதியானவர் என கங்குலி குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்