மெர்சல் பட தயாரிப்பாளரின் ட்விட்டர் ஹேக் - மீட்டு தந்த ட்விட்டர் இந்தியா

புதன், 14 நவம்பர் 2018 (11:55 IST)
‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தை சேரந்தவரும் தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் மனைவியுமான ஹேமா ருக்மணியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்து பின்பு மீட்கப்பட்டது.
 
தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இந்தப் படம் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
 
மெர்சல் படத்தை தனது 100 - வது படமாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.
 
இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால், தேனாண்டாள் பிலிம்ஸின் நிறுவனரான ஹேமா ருக்மணியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாம்.   
 
இதைதொடர்ந்து ஹேமா ருக்மணியின் ட்விட்டர் கணக்கை மீட்டு தந்ததுள்ளது.  "ட்விட்டர்இந்தியா". இதற்க்கு நன்றி கூறும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்விட்டை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் ஹேமா ருக்மணி. 
https://twitter.com/Hemarukmani1/status/1062562603229237248

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்