இதையடுத்து பிசிசிஐ-க்குப் புதிய தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் பரவ, அதை சச்சின் தரப்பு மறுத்தது. இந்நிலையில் தற்போது புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளர். வரும் 28 ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் தலைவராக அறிவிக்கப்படவுள்ளார்.
1979 ஆம் ஆண்டு காஷ்மீரில் பிறந்த மன்ஹாஸ் இந்தியாவுக்காக முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது பயிற்சியாளராகப் பணியாற்றிவரும் மிதுன், காஷ்மீரில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு அவர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் புதிய தலைவராக தேர்வாகவுள்ளார்.