ரசிகர்களின் பொறுமையை சோதித்த ஐபிஎல் நிர்வாகம்… இவ்ளோ லேட்டாவா விருது வழங்குவது?

vinoth

திங்கள், 27 மே 2024 (07:59 IST)
கடந்த இரண்டு மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஐபிஎல் 17 ஆவது சீசன் நேற்றோடு முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி மிக எளிதாக வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 113 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த இலக்கை 2 விக்கெட்கள் மட்டும் இழந்து 11 ஆவது ஓவரிலேயே எட்டி, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைப் பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இதையடுத்து அந்த அணி வீரர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களோடு கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டி எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே முடிந்துவிட்ட நிலையில் ரசிகர்கள் விருது வழங்கும் விழாவைப் பார்க்கலாம் என ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. கடைசியாக 11.54 மணிக்குதான் விருது வழங்கும் நிகழ்வை தொடங்கினர். இதனால் மைதானத்தில் காத்திருந்த பெருவாரியான ரசிகர்கள் கிளம்பிவிட்டனர். தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களும் கடுப்பாகி சமூகவலைதளங்களில் நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்