கோலி சொதப்பிய போது இந்தியா ஆதரித்தது… ஆனால் பாபருக்கு…? –பாகிஸ்தான் வீரர் கவலை!

vinoth

திங்கள், 14 அக்டோபர் 2024 (08:49 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார்.

இந்நிலையில்தான் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் சேர்த்தும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் பல அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி அந்த நாட்டு கோலி என அழைக்கப்படும் பாபர் அசாமை ஆடும் லெவனில் இருந்து வெளியில் வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள ஃபகார் ஜமான் “பாபர் அசாமை நீக்க சொல்லி விவாதிக்கப்படும் கருத்துகள் கவலையளிக்கின்றன. கோலி 2020 முதல் 2023 வரை மிகமோசமாக சராசரியாக 20 ரன்கள் வீதம் சேர்த்து ஆடிவந்தார். ஆனால் அவரை இந்திய அணி ஆதரித்தது. ஆனால் பாபர் ஆசாமை நீக்கினால் அது வீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். வீரர்களை இப்படி அச்சுறுத்தக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்