இந்நிலையில் தற்போது இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ள கம்பீர் "நான் அரசியலில் களமிறங்கப்போவதில்லை. இதுதொடர்பான வதந்திகளை நானும் கேட்டேன். ஒருவேலை நான் சமூக பிரச்னைகளை கையில் எடுப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை ட்விட்டர் பக்கம் மிக மிக முக்கியம். ட்விட்டர் போன்ற தளத்தில் நகைச்சுவை மேற்கொள்ளும் சுபாவம் உடையவன் அல்ல நான்.
இந்த நாட்டின் ஒரு குடிமகனாக சமூக பிரச்னைகளை கையில் எடுப்பது எனது உரிமையாகும். அதனால் தான் நான் அரசியலில் களமிறங்கப்போகிறேன் என்ற வதந்திகள் கிளம்பியிருக்கலாம். ஆனால், அப்படி ஒன்றும் இல்லை. அரசியல் முற்றிலுமாக வேறு ஒரு துறை. 25 ஆண்டுகளாக நான் ஒன்றும் செய்யவில்லை. அதனால், இனிமேல் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அதே நேரத்தில் நான் சிறந்த பயிற்சியாளராக இருக்கமுடியுமா என்பதை மதிப்பீடு செய்யவேண்டும். எனக்கு வலிமை, ஆர்வம், அதை செய்யவேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருக்கிறதா என்று அனைத்தையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அதன்பிறகு, அது குறித்து சிந்திப்பேன். நிர்வாகம் செய்வதில் நான் மிகவும் நேரடியாக செயல்படுபவன். அதனால், எந்த இடமாக இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு தோன்றவில்லை" என்றார்.