மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரேயா கூறுகையில், ரஜினிகாந்தை வெகுவாகப் புகழ்ந்தார். மேலும் அவரைப் போன்ற ஒரு எளிமையான மனிதரைப் பார்த்ததில்லை என்றும் ஸ்ரேயா தெரிவித்தார். அத்துடன் அரசியல் குறித்த கேள்விக்கு, பதிலளித்து பேசுகையில், "அரசியலுக்கு வர நெளிவு சுளிவுகளும் சூட்சுமங்களும் வேண்டும். எனக்கு அவை இல்லை. எனவே நான் அரசியலுக்கு பொருத்தம் இல்லை என்று நினைக்கிறேன். நடனம் சம்பந்தமான படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
நரகாசுரன் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இது எனது வாழ்க்கையில் முக்கிய படம். முதலில் நடிக்க தயங்கினேன். டைரக்டர் கார்த்திக் நரேன் முழு கதையையும் அனுப்பினார். அதை படித்ததும் பிடித்துப்போய் ஒப்புக்கொண்டேன். நடிப்பு பயிற்சி எடுத்து இதில் நடித்தேன்.’’ என்றார். இவ்வாறு அவர் கூறினார்.