டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் ஓய்வு பெறுகிறார் டூ ப்ளசிஸ்!

புதன், 17 பிப்ரவரி 2021 (11:14 IST)
பிரபல தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான பாப் டூ ப்ளசிஸ் டெஸ்ட் தொடர்களில் தனது ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் பாப் டூ ப்ளெசிஸ். தென் ஆப்பிரிக்க அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் பாப் டூ ப்ளசிஸ் இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் 4163 ரன்கள் அடித்துள்ளார். இதில் 10 முறை சதம் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களில் சிறந்தவராக கருதப்படும் டூ ப்ளசிஸ் தற்போது டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடுவார் என கூறப்பட்டுள்ளது. டூ ப்ளசிஸ் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்