அதன்படி பேட் செய்ய வந்த ஆர் சி பி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 196 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் பில் சால்ட், கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் கணிசமான ரன்களை அடிக்க, ரஜத் படிதார் அரைசதம் அடித்துக் கலக்கினார். டிம் டேவிட் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.
அதன் பின்னர் ஆடிய சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே சேர்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த அணியில் தோனி பேட்டிங்கில் 30 ரன்கள் சேர்த்தார். அதே போல அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஆர் சி பி அணி வீரர் பில் சால்ட்டை மின்னல் வேக ஸ்டம்பிங் ஒன்று செய்து வெளியேற்றினார். இந்த ஸ்டம்பிங்குக்கான அவரது ரியாக்ஷன் நேரம் 0.16 வினாடிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.