முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

Prasanth Karthick

ஞாயிறு, 23 மார்ச் 2025 (11:35 IST)

ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய இரவு நேர போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

 

ஐபிஎல் அணிகளிலேயே ஜாம்பவான் அணிகள் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும்தான். இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 5 கோப்பைகளை வென்றுள்ள இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிகள் ஐபிஎல்லில் Great Rivalry ஆக கருதப்படுகின்றன.

 

இந்த ஐபிஎல் சீசன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. முந்தைய ஐபிஎல் ரெக்கார்ட்ஸ் படி பார்த்தால் சிஎஸ்கே அணி அதன் ஹோம் க்ரவுண்டான சேப்பாக்கத்தில் மும்பை அணியை அதிக முறை வீழ்த்திய ரெக்கார்ட் உள்ளது. அதுபோலவே மும்பை இந்தியன்ஸ் அணி பெரும்பாலும் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் வென்றதே இல்லை.

 

இதுபோன்ற தகவல்களால் மும்பை அணி இன்று வெல்வது சாத்தியமா என்ற கேள்வி உள்ளது. அதேசமயம் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பும்ராவும் இல்லை. இதனால் இது இன்னும் மும்பை அணிக்கு பின்னடைவை அளிக்கும் என கூறப்படுகிறது.

 

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நாயகன் எம் எஸ் தோனி, அன்கேப்டு ப்ளேயராக களமிறங்குகிறார். அவர் பேட்டிங்கில் எத்தனையாவது ஆர்டரில் களமிறங்குவார் என்பது தெரியாத நிலையில் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இன்று எப்படியும் தோனியின் ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டை பார்த்துவிடலாம் என ரசிகர்கள் சேப்பாகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்