கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரை வீசினார். பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 சிக்சர்கள் அடித்து டேவிட் மில்லர் வெற்றியை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில சீசன்களாக மோசமான ஃபார்மில் இருந்த அவர் மீண்டும் இந்த போட்டியில் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டியுள்ளார்.