இந்தியாவிற்குள் நுழைந்த ஆப்பிரிக்க கொரோனா? – நோயாளியை தேடும் அதிகாரிகள்!

புதன், 25 மே 2022 (09:18 IST)
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த நபருக்கு புதிய வகை பிஏ5 கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த சில ஆண்டுகளில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெவ்வேறு வேரியண்டுகள் அடுத்தடுத்து பரவுவதால் மேலும் பாதிப்புகள் அதிகரிக்கின்றன.

முன்னதாக டெல்டா, ஒமிக்ரான் வகை வேரியண்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் தொடங்கியுள்ள பிஏ5 வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தனது பெற்றோரை பார்க்க குஜராத் மாநிலத்திற்கு ஒருவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியபோது நெகட்டிவ் என முடிவுகள் வந்ததால் அவர் நியூசிலாந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் அவரது மாதிரிக்கான மரபணு வரிசைப்படுத்தலின்போது அவருக்கு பிஏ5 தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என வதோதரா மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்